குழந்தை கடத்தல் வதந்தி! மீண்டும் இருவர் அடித்துக் கொலை!!

மும்பை: நிலோத் பால்தாஸ் மும்பையைச் சேர்ந்த சவுண்ட் இன்ஜினியர். அவரது நண்பர் அபிஜீத் நாத் ஆகிய 2 பேர் அசாம் மாநிலத்தில் உள்ள கர்பி ஆங்லாங் மாவட்டத்தில் இருக்கும் மலைப் பகுதிக்கு சுற்றுலா சென்றுள்ளனர்.கர்பி மலையில் உள்ள பஞ்சூரி சாரிகான் என்ற கிராமத்துக்கு சென்று அங்கு காரை நிறுத்தி வழி கேட்டனர். அவர்களைக் குழந்தை கடத்தும் கும்பலை சேர்ந்தவர்கள் என கிராம மக்கள் சந்தேகித்து காரை சுற்றி வளைத்துத் தாக்கியுள்ளனர்.இருவரும் எவ்வளவோ கெஞ்சியும் கிராம மக்கள் அவர்களை விடுவதாக இல்லை. வலி தாங்க முடியாமல் ரத்த வெள்ளத்தில் நிலோத் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.கர்பி ஆங்லாங் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ஜி.வி. சிவபிரசாத் கூறுகையில், தகவலறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றுள்ளனர். நிலோத் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். போலீசார் அபிஜீத்தை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். பரிசோதித்த மருத்தவர்கள் அபிஜித் வரும் வழியிலேயே உயிரிழந்து விட்டார் என தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here