Connect with us

National

ஆக்ரா – லக்னோ எக்ஸ்பிரஸ் சாலையில் விபத்து! 6 மாணவர்கள் பலி!!

Published

on

லக்னோ: உத்தரப்பிரதேச மாநிலத்தின் சாந்த் கபீர் நகர் பகுதியில் இருந்து கல்லூரி மாணவர்கள் இரண்டு பேருந்துகளில் ஹரித்வார் நோக்கி சுற்றுலா சென்றனர்.ஆக்ரா – லக்னோ இடையேயான அதிவேக நெடுஞ்சாலையில் ஒரு பேருந்து எரிபொருள் இன்றி நின்று போனது. பேருந்தில் இருந்த மாணவர்கள் மற்றொரு பேருந்தில் இருந்து எரிபொருள் எடுத்து அதன் மூலம் பெட்ரோல் பங்க் வரை செல்ல
திட்டமிட்டனர். எரிபொருளை நிரப்ப பேருந்தை விட்டு கீழே இறங்கினர்.அந்த வழியே அதிவேகமாக வந்த பேருந்து மாணவர்கள் மீது மோதியது. இந்த கோர விபத்தில் 6 மாணவர்கள் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.3 மாணவர்கள் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். சம்பவ இடத்திற்கு போலீசார் விரைந்தனர். மாணவர்கள் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்ற பேருந்தையும், ஓட்டுநரையும் தீவிரமாக தேடி வருகின்றனர்.

Copyright © 2017 Zox News Theme. Theme by MVP Themes, powered by WordPress. Shared By Fancy Text Generator