Connect with us

National

மோடி, கேஜரிவால் மீது ஆம் ஆத்மி கட்சியினர் வழக்கு!

Published

on

டெல்லி:பிரதமர் நரேந்திரமோடி, முதல்வர் கேஜரிவால் மீது ஆம் ஆத்மி கட்சி வழக்கு தொடர்ந்துள்ளது.

நாடாளுமன்றத்தில் பிரதமரின் வருகை கடந்த 4 ஆண்டுகளாக குறைவாக உள்ளது.
இதற்கு எதிராக டெல்லி ஐகோர்ட்டில் ஆம் ஆத்மி எம்பி சஞ்சய்சிங் மனுதாக்கல் செய்தார்.
எதிர்க்கட்சிகள் அனைத்தும் கடுமையாக விமா்சித்த பிறகும், நாடாளுமன்றத்துக்கு பிரதமா் தொடா்ந்து வருவதில்லை. முக்கிய விவாதங்களில் அவர் பங்கேற்பதில்லை.டெல்லி அரசின் மொஹல்லா கிளினிக் தொடங்கி, பல்வேறு திட்டங்களுக்கு பிரதமரும், துணைநிலை ஆளுநரும் தடை ஏற்படுத்தி வருகின்றனா் என்றார்.
இதேபோன்று சட்டப்பேரவைக்கு அரவிந்த்கேஜரிவால் குறைவான நாட்கள் வருகை தந்தார் என்று அவர்மீதும் வழக்கு போடப்பட்டுள்ளது.ஆம் ஆத்மி கட்சியின் எம்.எல்.ஏ.வான கபில்மிஸ்ரா வழக்கு தொடர்ந்துள்ளார். கடந்த ஆண்டுகளில் 27முறை நடந்துள்ள பேரவை கூட்டங்களில் 7ல் மட்டுமே முதல்வர் பங்கேற்றார். அவரது சம்பளப்பணத்தை வராத நாட்களுக்கு பிடித்தம் செய்யவேண்டுமென மனுவில் கேட்டுக்கொண்டுள்ளார்.

Copyright © 2017 Zox News Theme. Theme by MVP Themes, powered by WordPress. Shared By Fancy Text Generator