பயிற்சி மருத்துவர் தற்கொலை!

மானாமதுரை: சிவநாதன் மானாமதுரை ரயில்வே காலனியைச் சேர்ந்தவர். சென்னையில் தொழிலாளர் நல மருத்துவமனையில் பயிற்சி மருத்துவராக பணியாற்றி வந்துள்ளார்.சென்னையிலிருந்து நேற்று மாலை மானாமதுரை பயிற்சிமருத்துவர் சிவநாதன் வந்தார். வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார்.வீட்டில் மயங்கிய நிலையில் கிடந்துள்ளார். வீடு திரும்பிய சிவநாதனின் பெற்றோர் அதிர்ச்சிக்குள்ளாயினர். உடனடியாக சிவநாதனை மீட்டு மானாமதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.சிகிச்சை பலனின்றி சிவநாதன் உயிரிழந்தார். தகவலிறந்த போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here