ஜெர்மனியில் துப்பாக்கிச் சுடும் போட்டி! ஏழை மாணவிக்கு உதவிய முதல்வர்!!

உத்திரப்பிரதேசம்: வருகின்ற ஜூன் 22-ம் தேதி ஜெர்மனியில் உள்ள சுஹல் நகரில் ஜூனியர் உலகக் கோப்பை துப்பாக்கிச்சுடுதல் போட்டி நடைபெற உள்ளது.50 மீட்டர் துப்பாக்கிச்சுடும் போட்டியில், உத்தரப்பிரதேசம் மாநிலம் மீரட்பூரைச் சேர்ந்த ப்ரியா சிங் என்ற 19 வயது மாணவி தேர்ந்தெடுக்கப் பட்டுள்ளார். இந்தியா சார்பாகக் கலந்துகொள்ள உள்ளார். ஏழ்மையின் காரணமாக வெளிநாடு செல்ல முடியாத நிலையில் உள்ளார்.தனக்கு நிதி உதவி செய்யுமாறு உத்தரப்பிரதேச முதல்வர் மற்றும் பிரதமர் மோடி ஆகியோருக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். இதையடுத்து மாணவி ப்ரியா சிங்கிற்கு, உத்திரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் அரசு சார்பில் 4 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் வழங்க உத்தரவிட்டுள்ளார்.மேலும் பயண செலவின் ஒரு பகுதியை மாவட்ட நிர்வாகம் தரும் எனவும் யோகி கூறியுள்ளார். ப்ரியாவின் குடும்பத்தினர் இதற்கு வரவேற்பு தெரிவித்துள்ளனர்.அரசு எனக்கு நிதி உதவி செய்ய முன்வந்திருப்பது மிகவும் மகிழ்ச்சி. இதற்காக அரசுக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். நாட்டுக்கு கௌரவம் தேடி தருவது எனது கடமையாகும் என்று ப்ரியா சிங் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here