கைதிகளுக்கு போதை மருந்து! சப்ளை செய்த சிறை மருத்துவர் கைது!!

கொல்கத்தா: அமித்வா சவ்தாரி மேற்கு வங்க மாநிலத்தில் உள்ள அலிபூர் சிறைசாலையில் சிறை மருத்துவராக பணி புரிந்து வருகிறார். 10 ஆண்டுகளாக இங்கு பணியில் உள்ளார்.இவர் மீது கைதிகளுக்கு போதை மருந்து சப்ளை செய்வது உட்பட பல்வேறு குற்றச்சாட்டுகள் கூறப்பட்டு வந்தன. இதனையடுத்து போலீசார் தீவிர சோதனை நடத்தினர். சோதனையின் போது கைதிகளுக்கு போதை பொருள் விற்பனை செய்து வந்துள்ளது கண்டறியப்பட்டது.கைதிகளுக்கு மது பாட்டில்கள் சப்ளை, செல்போன்கள் சப்ளை செய்ததும் கண்டறியப்பட்டது. இதுகுறித்து நடத்தப்பட்ட விசாரணையின் போது அவரிடமிருந்து ரூ.1.46 லட்சம் ரொக்கப்பணம் கைப்பற்றப்பட்டது.இந்த சம்பவம் குறித்து அமைச்சர் பிஸ்வாஸ் கூறுகையில் சிறைச்சாலை ஊழியர்கள் தற்போது கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டுள்ள மருத்துவர் சிறையில் நடைபெற்றுள்ள மோசடிக்கு ஒரு சிறிய இணைப்பாக மட்டுமே இருந்துள்ளார் என்று கூறியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here