அரசு ஆவணத்தை திருத்த புது யுக்தி! மணல் கொள்ளையில் தனியார் நிறுவனங்கள்!!

திருச்சி: கனிமவள அதிகாரிகள் அளிக்கின்ற அனுமதி ரசீது இருந்தால் மட்டுமே தமிழக அரசின் மணல் குவாரிகளில் தனியார் ஒப்பந்ததாரர்கள் மணல் அள்ளிச்செல்ல அனுமதி அளிக்கப்படுகின்றது.நாள் ஒன்றுக்கு லாரி ஒன்றிற்கு ஒரு அனுமதி ரசீது மட்டுமே வழங்கப்படும் என்பதால் அதனை பெறும் தனியார் ஒப்பந்ததாரர்கள் ஊதுபத்தியைக் கொண்டு நூதன முறையில் அதில் குறிப்பிடப்பட்டுள்ள விவரங்களை எளிதில் அழித்துவிடுகின்றனர்.அதில் எழுதப்பட்டுள்ள மையானது ஊதுபத்தி சூட்டிற்கு ஆவியாகும் தன்மை பெற்றிருப்பதால் சம்பந்தபட்ட தனியார் மணல் நிறுவனங்கள் ஒரு நாளைக்கு எத்தனை முறை வேண்டுமானாலும் மணலை ஏற்றி சட்ட விரோதமாக கடத்திச்செல்கிறது.மணல் விற்பனையில் ஈடுபடும் தனியார் நிறுவனங்கள் அரசு முத்திரையிடப்பட்ட அனுமதி ரசீதில் உள்ள விவரங்களை ஊதுபத்தி கொண்டு நூதன முறையில் அழித்து விட்டு போலியான விவரங்களை நிரப்பி ஒன்றுக்கும் மேற்பட்டமுறை மணலை கடத்தி விற்பதால் அரசுக்கு 20 ஆயிரம் கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here