Connect with us

Crime

பீரோவை தூக்கி சென்ற கொள்ளையர்கள்! ரூ.20 லட்சம் கொள்ளை!!

Published

on

அரியலூர்: ராமு அரியலூர் மாவட்டம் உட்கோட்டை கிராமத்தைச் சேர்ந்தவர். நேற்றிரவு தனது குடும்பத்தினருடன் மொட்டை மாடியில் தூங்கிக் கொண்டிருந்தார்.நள்ளிரவில் வீட்டில் புகுந்த கொள்ளையர்கள் அங்கிருந்த பீரோவை திறக்க முடியாமல் அப்படியே தூக்கிச் சென்றுள்ளனர்.ராமுவின் வீட்டிற்கு அருகே உள்ள காட்டுப் பகுதிக்கு பீரோவை தூக்கிச் சென்றுள்ளனர். பீரோவை உடைத்த கொள்ளையர்கள் அதிலிருந்த 25 சவரன் தங்க நகை மற்றும் 25 லட்ச ரூபாய் பணத்தைக் கொள்ளையடித்து சென்றுள்ளனர்.தகவலின் பேரில் விரைந்து வந்த ஜெயங்கொண்டம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Copyright © 2017 Zox News Theme. Theme by MVP Themes, powered by WordPress. Shared By Fancy Text Generator