நீட் தேர்வினால் மாணவிகள் தற்கொலையா? நிர்மலா சீதாராமன்!

டெல்லி: நீட் தேர்வினால் தமிழகத்திலும் வட இந்தியாவிலும் மாணவிகள் தற்கொலை செய்து கொண்டது குறித்து மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் நிர்மலா சீதாராமனிடம் செய்தியாளர்கள் கேள்வி கேட்டனர். பதிலளித்த மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன், இந்த தற்கொலைகள் நீட் தேர்வினால்தான் ஏற்பட்டதா? என்பது
குறித்து யோசிக்க வேண்டும் என்று கூறினார்.தற்கொலை செய்து கொண்டவர்கள் தமிழகத்தவர்களா? வட இந்தியர்களா? என்று நான் பிரித்து பார்ப்பதில்லை. ஒரு பரிட்சை எழுதுகிறோம். எதிர்பாராத வகையில் ஒரு மாணவர் தோல்வி அடைகிறார் என்றால் அது சிஸ்டம் கோளாறா? அல்லது அந்த மாணவர் அல்லது மாணவி தேர்வு எழுத தயார் செய்யப்படுவதில் கோளாறா? என்று யோசிக்க வேண்டும்.மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டது மிகவும் வருந்தத்தக்க ஒன்று தான், அதில் சந்தேகம் இல்லை. ஆனால் அதே நேரத்தில் அந்த தற்கொலைக்கு நீட் தேர்வு மற்றும் ஐஐடி மட்டுமே காரணம் என்பது சரியல்ல.ஒவ்வொரு மாணவர்களுக்கும் தேர்வுக்கு தயார் செய்வது குறித்தும் அவர்களுக்கு சப்போர்ட் கொடுப்பது பற்றியும் நாம் யோசித்தால் இந்த பிரச்சனைக்கு தீர்வு கிடைக்கும். இவ்வாறு அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here