வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் விடிய விடிய சோதனை! கட்டு கட்டாக பணம் சிக்கியது!!

திருச்செங்கோடு: நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அருகே வரகூராம்பட்டியில் வட்டார போக்குவரத்து அலுவலகம் உள்ளது. இங்கு பணியில் இருப்பவர்கள் லஞ்சம் வாங்குவதாக புகார்கள் குவிந்தன.நாமக்கல் லஞ்ச ஒழிப்பு மற்றும் ஊழல் தடுப்பு துணை போலீஸ் கண்காணிப்பாளர் ஜெயகுமார், இன்ஸ்பெக்டர் நல்லம்மாள் மற்றும் 10 பேர் கொண்ட குழுவினர் வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் அதிரடியாக சோதனை நடத்தினர். அலுவலகத்தில் இருந்த வட்டார போக்குவரத்து அதிகாரி ராமலிங்கம், மோட்டார் வாகன ஆய்வாளர் செந்தில்குமார் மற்றும் அலுவலர்கள், பணியாளர்கள், இடைத்தரகர்கள் ஆகியோரிடம் விசாரணை நடத்தப்பட்டது.15க்கும் மேற்பட்ட ஒட்டுநர் பயிற்சி பள்ளி நடத்தி வருபவர்களிடம் தீவிர விசாரணை மேற்கொண்டனர். அங்கு விடிய விடிய நடத்திய சோதனையில் பல்வேறு ஆவணங்களும், கணக்கில் வராத ரொக்கம் ரூ.2,20,000 மும் பறிமுதல் செய்யப்பட்டது.லஞ்ச ஒழிப்புத் துறையினர், மோட்டார் வாகன ஆய்வாளர் செந்தில்குமார் மற்றும் இரு அலுவலர்கள் மீது வழக்கு பதிவு செய்ய இருப்பதாக தெரிவித்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here