பென்சன் கேட்டு பாம்புடன் வந்த முதியவர்!

கர்நாடகா: மாபு சாபா ரஜேகான் கர்நாடக மாநிலம் கடக் மாவட்டம் ரோனாவைச் சேர்ந்தவர். தன்னுடைய பென்சன் பணத்தில் வாழ்ந்து வருகிறார். கடந்த எட்டு மாதங்களாக இவருக்கு பென்சன் பணம் வரவில்லை. மேலும் இவர் தொழுநோயால் பாதிக்கப்பட்டுள்ளார்.நிறுத்திய பென்சனை மீண்டும் பெற சம்பந்தப்பட்ட அலுவலகங்களுக்கு அலைந்துள்ளார். பென்சன் கிடைத்தப்பாடில்லை.வாழ்கையின் கடைசிக்கட்டத்திற்கு வந்த மாபு சாபா விஷ பாம்பு ஒன்றை தன்னுடைய தோளில் போட்டவாறு பென்சன் கொடுக்கும் அலுவலகத்திற்கு வந்துள்ளார்.பென்சன் வழக்க கோரியும் மறுத்தால் பாம்பை அதிகாரியின் கழுத்தில் போடுவதாகவும் கூறியுள்ளார். அதிகாரிகள் விரைவில் பென்சன் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here