பெற்றோர்கள் எதிர்ப்பு! காதலர்கள் தற்கொலை!!

மும்பை: சல்மான் கான் (26) மும்பையை சேர்ந்தவர். இவரின் காதலி மனிஷா நேகி (21). கடந்த 4 ஆண்டுகளாக கதாலித்துள்ளனர். காதலிப்பது இருவரது வீட்டினருக்கும் தெரிய வந்தது. பெற்றோர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.காதலர்கள் இருவரும் வீட்டை விட்டு வெளியேறினர். இருவரும் தங்களுடைய வீட்டிற்கு தொலைபேசி மூலம் இரண்டு நாட்களில்  திரும்பி வருவதாக தெரியபடுத்தியுள்ளனர். இரு தினங்களுக்கு முன்னர் அங்குள்ள ஒரு இடத்தில் கார் ஒன்று வெகுநேரமாக நின்று கொண்டிருந்தது.
தகவல் கிடைத்து சம்பவ இடத்துக்கு வந்த போலிசார் காரை சோதனை செய்தனர். அப்போது உள்ளே சல்மானும், மனிஷாவும் விஷம் குடித்த நிலையில் சடலமாக கிடந்துள்ளனர். சடலத்தை கைப்பற்றிய போலிசார் பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்நிலையில் சல்மானின் காதல் குறித்து மனிஷா வீட்டில் பேச இருந்ததாகவும் அதற்குள் அவர்கள் இந்த முடிவை எடுத்தது அதிர்ச்சியளிப்பதாகவும் சல்மான் குடும்பத்தார் கூறியுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here