அடக்கம் செய்த குழந்தை உயிருடன் மீட்பு!

பிரேசில்: பிரேசில் கனரனா நகராட்சியில் உள்ள தம்பதியினருக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது. பிறந்து சிறிது நேரத்தில் குழந்தையிடம் எந்த விதமான அசைவும் இல்லை.பெற்றோர் குழந்தை இறந்து விட்டதாக முடிவு செய்துள்ளனர். அருகில் இருந்த சுடுகாட்டில் குழந்தையை அடக்கம் செய்துள்ளனர்.அடக்கம் செய்த சில மணிநேரத்தில் குழந்தையின் அழுகுரல் கேட்டு அங்கிருந்தவர்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் விரைந்து வந்துள்ளனர்.இரண்டடி ஆழத்தில் அடக்கம் செய்யப்பட்டிருந்த குழந்தையை உயிருடன் மீட்டனர். உடனடியாக குழந்தைகள் சிறப்பு மருத்துவமனைக்கு கொண்டு சென்று சிகிச்சை அளித்து வருகின்றனர். குழந்தையின் பெற்றோர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here