Connect with us

Crime

மனைவி கொலை! தப்ப முயன்ற கணவர் கைது!!

Published

on

மலப்புரம்: நௌஷாத் பிஹாரை சேர்ந்தவர். இவருக்கு கோதலை என்ற மனைவியும் இரண்டு குழந்தைகளும் உள்ளனர். குடும்பத்தினருடன் கேரளா மலப்புரத்தில் தங்கி மொசைக் போடும் வேலை செய்து வந்தார்.நௌஷாத் மனைவியிடம் சண்டையிட்டுள்ளார். தீவிரமடைந்த வாக்குவாதத்தில் தனது மனைவியை கத்தியால் குத்தி கொலை செய்துள்ளார். யாருக்கும் தெரியாமல் வீட்டை பூட்டி விட்டு குழந்தைகளுடன் வெளியேறினார்.தகவலிறிந்து வந்த போலீசார் கோதலின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். நௌஷாத்தை பிஹார் தப்பி செல்லலாம் என்பதால் ரயில் நிலையங்களுக்கு தகவல் தெரிவித்தனர்.சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் ரயில்வே போலீசார் தன்பாத் ரயிலில் குழந்தைகளுடன் இருந்த நௌஷாத்தை கைது செய்தனர்.

Copyright © 2017 Zox News Theme. Theme by MVP Themes, powered by WordPress. Shared By Fancy Text Generator