வீட்டிலே தயாரிக்கலாம் ’வைட்டமின்-சி’ சீரம்!

சென்னை: தோல் அழகை பராமரிப்பதில் ’வைட்டமின்-சி சீரம்’ முக்கியப்பங்கு வகிக்கிறது. அழகு சாதன கடைகளில் அதிக விலைக்கு கண்கவரும் பாட்டில்களில் பல பெயர்களில் இது கிடைக்கிறது.வீட்டில் எளிதாக இந்த சீரத்தை தயாரிக்க முடியும்.தேவையான பொருட்கள்:வைட்டமின் சி பவுடர்(எல்-ஆஸ்கார்பிக் ஆசிட்), ரோஸ்வாட்டர், வெஜிடபிள் க்ளிசரின் ஒரு டீஸ்பூன் ரோஸ்வாட்டரில் கால் டீஸ்பூன் வைட்டமின்சி பவுடரை இட்டுக்கலக்க வேண்டும்.இக்கலவையில் வெஜிடபிள் க்ளிசரின் சேர்த்து மூன்றும் ஒன்றோடு ஒன்று கலக்கும் வரை நன்றாக குலுக்கவேண்டும். அதிகளவு தேவையென்றால் வைட்டமின்சி கலவையுடன் க்ளிசரினை மிக்சியில் இட்டு கலக்கலாம்.இம்மூன்று பொருட்களும் சேர்ந்த வைட்டமின் சி சீரம் இப்போது தயார்.இதனை டிராப்பர் பாட்டிலில் சேகரித்து ப்ரிட்ஜில் வைத்து பயன்படுத்த வேண்டும்.
மிகவும் சென்சிடிவான தோல் உடையவர்கள் வைட்டமின் சி பவுடருடன் சோற்றுக்கற்றாழை சாறு அல்லது ஜெல் சேர்த்தால் பயன் தரும்.வாசனைக்காக ஆப்பிள், ஆரஞ்ச், பைனாப்பிள் ஆகியவற்றின் சாறுகளையும் தேவைக்கேற்ப வைட்டமின் சி சீரத்துடன் குறைவாக சேர்த்து பயன்படுத்தலாம்.தோலை புத்துணர்ச்சியாக வைத்திருக்கவும், மாய்ஸ்ச்சரைசராகவும், புதிய செல்கள் உருவாகவும் இந்த ’சீரம்’ மிகவும் பயன்படும். குளித்த பின்னரும், இரவு படுக்கைக்குப் போகுமுன்னரும் வைட்டமின் சி சீரத்தை பயன்படுத்தலாம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here