Connect with us

Sports

இந்திய கிரிக்கெட் அணியில் சச்சின் மகன் அர்ஜூன் !

Published

on

மும்பை: சச்சின் டெண்டுல்கர் இந்திய கிரிக்கெட்டில் சரித்திர சாதனை படைத்த வீரர். மாஸ்டர் பேட்ஸ்மேன் சச்சின் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் ரன் குவித்து பல சாதனையையும் செய்துள்ளார்.சச்சின் டெண்டுல்கரின் மகன் அர்ஜூன் டெண்டுல்கரும் சிறந்த கிரிக்கெட் வீரராக உருவாகி வருகிறார். 19 வயதுக்கு உட்பட்ட வீரர்களுக்கான மண்டல கிரிக்கெட் அகாடமியின் பயிற்சி முகாமில் அர்ஜூன் செயல்பாடுகள் சிறப்பாக அமைந்தன. இதையடுத்து இந்திய யு-19 அணியில் தேர்வாகி உள்ளார்.இந்திய கிரிக்கெட் அணியின் 19 வயதுக்கு உட்பட்டோருக்கான இலங்கை சுற்றுப்பயணத்தில் 18 வயதாகும் அர்ஜூன் பங்கேற்க உள்ளார். 4 நாள் போட்டிக்கான அணியில் அர்ஜூன் இடம் பெற்று விளையாடுகிறார்.இந்தியா இலங்கை தொடரில் 19 வயதுக்குட்டபட்டவர்கள் சச்சின் மகன் அர்ஜூன் டெண்டுல்கர் விளையாடுவது கிரிக்கெட் ரசிகர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Copyright © 2017 Zox News Theme. Theme by MVP Themes, powered by WordPress. Shared By Fancy Text Generator