பெங்களூர்: கர்நாடக மாநிலத்தில் டிவி வெடித்து இளம்பெண் பலியானார். கர்நாடகாவில் பருவ மழை தொடங்கியுள்ளது. கடந்த சிலதினங்களாக இடியுடன் மழை பெய்து வருகிறது.
கொப்பள் அருகே உள்ள சாம்பல்புரா கிராமத்தில் நேற்றிரவு மழை கொட்டியது. அக்கிராமத்தில் வீட்டில் தனியாக இருந்த விசாலாட்சி (16) என்ற பெண் இடிவிழுந்ததால் டிவியை அணைப்பதற்காக சென்றுள்ளார்.
அப்போது இடிதாக்கி டிவி திடீரென்று வெடித்துள்ளது. இதனால் சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்தார். இன்று காலை அவர் இறந்த விபரம் தெரியவந்தது. அக்கம்பக்கத்தினர் உடலை கைப்பற்றி மருத்துவமனையில் சேர்த்தனர்.