லக்கேஜூக்கு அபராதம் உத்தரவு நிறுத்தம்! ரயில் பயணிகளுக்கு நிம்மதி!!

மும்பை:ரயில் பயணிகள் கூடுதல் லக்கேஜ் எடுத்துச்சென்றால் அபராதம் விதிக்கும் திட்டம் கைவிடப்பட்டுள்ளது.
ரயில்வேத்துறை சமீபத்தில் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டிருந்தது.அதன்படி, இரண்டாம் வகுப்பு பயணிகள் 70கிலோ, இரண்டாம் வகுப்பில் படுக்கைவசதியில் பயணிப்போர் 80கிலோ எடையுள்ள லக்கேஜ் எடுத்துச்செல்லலாம்.
அதுவும், குறிப்பிட்ட வடிவத்தில் உள்ள பெட்டிகளில்தான் லக்கேஜ் எடுத்துச்செல்லவேண்டும்.அதிக லக்கேஜ் கொண்டு சென்றால் 6 மடங்கு அபராதம் விதிக்கப்படும்.
இவ்வாறு அறிவிக்கப்பட்டிருந்தது.
இத்திட்டத்திற்கு நாடு முழுவதும் பல தரப்பினர்களிடமிருந்தும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.
சமூக வலைதலங்களிலும் கடுமையான விமர்சனங்கள் எழுந்தன.
இதனால் இத்திட்டத்தை கைவிடுவதாக ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here