அரசு முட்டைகள் வெளிமார்க்கெட்டில் விற்பனை!

சென்னை:பள்ளி, அங்கன்வாடிகளில் வழங்கப்படும் முட்டைகள் முறைகேடாக வெளிமார்க்கெட்டில் விற்கப்பட்டு வருகின்றன.
தமிழகத்தில் தினமும் 3 கோடி முட்டைகள் உற்பத்தியாகின்றன.அதில் சுமார் 1 கோடி முட்டைகள் கேரளாவுக்கு அனுப்பப்படுகின்றன.
சுமார் 52 லட்சம் முட்டைகள் மதிய உணவு திட்டத்திற்காக அரசு வாங்குகிறது.
மீதமுள்ள சுமார் 1½ கோடி முட்டைகள் தமிழக சந்தைகளில் விற்பனையாகின்றன.
தலைநகர் சென்னையில் மட்டும் சுமார் 40 லட்சம் முட்டைகள் விற்பனையாகின்றன.சத்துணவு கூடங்களுக்கு வழங்கப்படும் முட்டைகள் மீது நீல நிறத்தில் சீல் வைக்கப்படும். திருச்செங்கோட்டில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்திடம் தமிழக அரசு முட்டைகளை கொள்முதல் செய்கிறது.
சந்தைவிலையில் இருந்து ரூ.1.10குறைவாக முட்டைகள் வாங்கப்படுகின்றன.சமீபகாலமாக அரசு முத்திரையுடைய முட்டைகள் வெளிசந்தைகளில் அதிகளவில் விற்பனைக்கு கிடைக்கின்றன.
இவை தரம்குறைந்தவை என அதிகாரிகள் கூறிவிடுவதால் வேறுவழியின்றி வெளிமார்க்கெட்டுக்கு செல்கின்றன என தெரியவந்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here