ராமேஸ்வரத்தில் கணவன், மனைவி தற்கொலை!

ராமேஸ்வரம்: சரவணன் ஈரோடு மாவட்டம் பெரியபாளையத்தை சேர்ந்தவர். இவரது 2வது மனைவி காளீஸ்வரி. ராமேஸ்வரத்தில் விடுதி ஒன்றில் அறை எடுத்து தங்கியிருந்தனர்.காலை வெகு நேரம் ஆகியும் அறை கதவு திறக்காததால் விடுதி மேலாளர் காவல்துறைக்கு தகவல் தெரிவித்துள்ளார்.விரைந்து வந்த காவல்துறையினர் கதவை உடைத்து உள்ளே சென்றனர். சரவணன் மற்றும் காளீஸ்வரி உயிரிழந்து கிடந்துள்ளனர். இருவரும் மதுவில் விஷத்தை கலந்து குடித்து தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.போலீசார் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து விசாரணை செய்து வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here