பயணியை சுமந்துசென்ற போலீசுக்கு பாராட்டு!!

உத்தர்கண்ட்: உடல்நிலை பாதிக்கப்பட்ட பயணியை முதுகில் சுமந்து சென்ற போலீஸ் அதிகாரிக்கு இணையத்தில் பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன.உத்தர்கண்டில் உள்ள பத்ரிநாத், கேதார்நாத், கங்கோத்ரி, யமுனோத்ரிக்கு ஆயிரக்கணக்கான பக்தர்கள் பாதயாத்திரையாக வருவது வழக்கம்.
சமீபத்தில், மத்திய பிரதேச மாநிலம், போபாலைச் சேர்ந்த, ராஞ்சி ராஜன், 55, குடும்பத்தினருடன், யமுனோத்ரிக்கு வந்தார். வழியில், திடீரென, ராஞ்சியின் உடல்நிலை பாதிக்கப்பட்டதால், அவரது குடும்பத்தினர் திகைத்தனர்.அங்கு வந்த, போலீஸ் அதிகாரி லோகேந்திர பகுகுணா, தன்முதுகில் ராஞ்சிராஜனை சுமந்து, 2 கி.மீ., தொலைவில் உள்ள மருத்துவமனையில் சேர்த்தார்.
ராஞ்சியை சோதித்த டாக்டர்கள், அவருக்கு லேசான மாரடைப்பு ஏற்பட்டதாகவும், உரிய நேரத்தில் மருத்துவமனைக்கு அழைத்து வந்ததால், உயிருக்கு ஆபத்து இல்லை என்றும் கூறினர். சிகிச்சை முடிந்து ராஞ்சி தனது வீடு திரும்பினார்.சார்தாம் யாத்திரையில், பக்தருக்கு உதவிய போலீஸ் அதிகாரி லோகேந்திர பஹூகுணாவை, போலீஸ் தலைமை அலுவலகத்திற்கு வரவழைத்த, டி.ஜி.பி., அசோக் குமார், சான்றிதழும், 5,000 ரூபாய் பரிசும் வழங்கி, பாராட்டினார்.
உத்தர்கண்ட் முதல்வர் த்ரிவேந்திரசிங்கும் லோகேந்திர பகுகுணாவைப் பாராட்டியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here