பிரதமரை கொல்ல சதித்திட்டம்?!

புனே:மாவோயிஸ்ட் இயக்கத்தினர் பிரதமர் நரேந்திரமோடியை கொலை செய்ய திட்டமிட்டிருப்பதாக திடுக்கிடும் தகவல் வெளியாகி உள்ளது.
புனே நகரில் பீமா கோரேகான் போர் வெற்றியை கொண்டாடும் விழா, ஊர்வலம் நடந்தது.அதில் ஏற்பட்ட வன்முறையில் பலர் கைதாயினர். அவர்களில் மாவோயிஸ்ட் இயக்கத்தை சேர்ந்த ரோனா ஜேக்கப் என்பவரும் ஒருவர்.
மேலும், மாவோயிட்ஸ் இயக்கத்துடன் தொடர்புடைய தலித் செயல்பாட்டாளர்கள், பேராசிரியர்கள் பலரும் கைதாயினர்.
அவர்களது மின்னஞ்சல்கள் சோதனை செய்யப்பட்டன. அப்போது திடுக்கிடும் தகவல்கள் தெரியவந்தன.

ஒரு மெயிலில் மோடியை கொல்ல திட்டமிட்டது தொடர்பான விஷயங்கள் இடம்பெற்றிருந்தன.
இந்து பாசிசத்தைத் தோற்கடிப்பது என்பது நமது இயக்கத்தின் முக்கியக் குறிக்கோள்.
பிகார் மற்றும் மேற்கு வங்கத்தில் தோல்வியடைந்திருந்தாலும் 15 மாநிலங்களில் பாஜக ஆட்சியை மோடி நிறுவியுள்ளார். இது தொடர்ந்தால் நமது இயக்கத்துக்குப் பாதிப்பை ஏற்படுத்தும்”.ராஜீவ் காந்திக்கு நிகழ்ந்தது போன்ற ஒரு நிகழ்வை சிந்தித்துவருகிறோம்.
பிரதமர் மோடியின் சாலைப் பயணங்களைக் குறிவைப்பது பயனுள்ளதாக இருக்கும் என்றும் மெயிலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது அரசியல்வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here