பிளாஸ்டிக் பாட்டிலுக்கு காசு கொடுக்கும் மிசின்!

குஜராத்: பிளாஸ்டிக்கை ஒழிக்க குஜராத்தில் புதுவிதமான முயற்சி ஒன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது. குஜராத் மாநில வதோரா ரயில் நிலையத்தில் பிளாஸ்டிக் ஒழிப்பை வலியுறுத்தும் விதமாக பிளாஸ்டிக் ஒழிப்பு இயந்திரம் ஒன்று வைக்கப்பட்டுள்ளது.இந்த இயந்திரத்தில் பிளாஸ்டிக் பாட்டில்களை உள்ளே போட்டால் அவை உடைக்கப்படுகிறது. பிளாஸ்டிக் பொருட்களை போட்ட பிறகு இயந்திரத்தில் பயணிகள் செல்போன் எண்ணை பதிவு செய்ய வேண்டும்.பேடிஎம் கணக்கில் 5 ரூபாய் பணத்தை பெற்றுக்கொள்ளலாம். இந்த புதிய இயந்திரத்துக்கு பொதுமக்களிடம் மிகுந்த வரவேற்பு பெற்றுள்ளது.தமிழ்நாட்டில் 2019 ஜனவரி முதல் மக்காத பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here