விவசாயி மூக்கில் ரத்தம் குடித்துவந்த அட்டை!

சீனா: சீனாவில் உள்ள ஹர்பின் மாகாணத்தில் வசித்துவரும் விவசாயி ஷமிங்(34).
வனப்பகுதியை ஒட்டியுள்ள கிராமத்தில் இவர் வசித்துவருகிறார்.அந்த வனப்பகுதியில் அட்டைகள் அதிகளவில் உள்ளன. காட்டுக்குள் வேலைக்கு சென்ற இவர் ஓய்வெடுத்துள்ளார். அப்போது ஒரு அட்டை மூக்கினுள் சென்றுள்ளது.ஷமிங்கின் மூக்கில் இருந்து தொடர்ந்து ரத்தம் வழிந்துகொண்டிருந்தது. அதனை நிறுத்த டாக்டர்கள் மருந்து மாத்திரை அளித்தனர். இருந்தபோதும் ரத்தம் நிற்கவில்லை. இறுதியில் அவர் மூக்கினுள் அட்டை குடியிருந்தது தெரியவந்தது.உடனடியாக ஆபரேஷன் செய்யப்பட்டு அட்டை அகற்றப்பட்டது. ஷமிங்கின் ரத்தத்தை குடித்த அட்டை 2செ.மீ. நீளம் இருந்தது. ஓரிரு மணிநேரம் தாமதம் ஆகியிருந்தால் கூட ஷமிங்கின் உயிருக்கு ஆபத்து ஏற்படிருக்கும் என்று டாக்டர்கள் தெரிவித்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here