புத்தம்புதிய பூமி! இந்திய விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு!!

அகமதாபாத்: இந்திய விஞ்ஞானிகள் பூமியை போலவே இருக்கும் கிரகம் ஒன்றை கண்டுபிடித்துள்ளனர்.
அபிஜித் சக்ரபோர்த்தி என்பவரின் தலைமையில் பிஆர்எல் என்ற குழு இச்சாதனைசெய்துள்ளது.புதிய கிரகம் EPIC 211945201b என்று அடையாளம் காணப்படுகிறது.
இந்த கிரகம் பூமியில் இருந்து 600 ஒளி ஆண்டுகள் தொலைவில் உள்ளது.
பார்ப்பதற்கு பூமி போன்று இருந்தாலும் பூமியை விட 10 மடங்கு எடை அதிகாக உடையது.அதனை சுற்றி 600 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை நிலவி வருகிறது.
இந்த கிரகத்தில் உயிரினம் இருக்க வாய்ப்பு இல்லை என்று நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.பிரான்ஸ் நாட்டை சார்ந்த வானியல் நிபுணர்கள் கடந்த மார்ச் புதிய கிரகத்தை கண்டுபிடித்தனர்.
அதற்கு, கே2-229பி என்று பெயரிடப்பட்டுள்ளது.
பூமியை விட 20 சதவீதம் பெரியதாகவும், 2,000 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையும் கொண்டதாக அக்கிரகம் இருக்கிறது என்று தெரிவித்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here