பணம் பறிக்கும் மாநில அரசு!! விளையாட்டு வீரர்கள் எதிர்ப்பு!

ஹரியானா:விளையாட்டு வீரர்கள் வருமானத்தை பறிக்க நினைக்கிறது என்று ஹரியானா அரசு மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
ஹரியானா மாநிலத்தைச் சேர்ந்த பல விளையாட்டு வீரர்கள், தடகளப்போட்டி, பளுதூக்குதல், ஓட்டம் உள்ளிட்ட சர்வதேச போட்டிகளில் சாதனை படைத்து வருகின்றனர்.சமீபத்தில் நடந்த காமன்வெல்த் போட்டிகளில் ஹரியானாவை சேர்ந்தவர்கள் 22 பதக்கங்கள் பெற்றனர்.
இந்நிலையில், தடகள வீரர்கள் தங்களது வருமானத்தில் மூன்றில் ஒரு பங்கு அதாவது, 33 சதவிகிதத்தை அரசுக்கு செலுத்த வேண்டும்.அரசு பணியில் உள்ள தடகள வீரர்கள், வர்த்தக ரீதியில் விளையாட்டு மூலம் பணம் சம்பாதிப்பவர்கள் அரசுக்கு பணம் செலுத்தவேண்டும் என்று மாநில அரசு அதிரடி உத்தரவு பிறப்பித்து உள்ளது.
இந்த உத்தரவு இன்று அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது.மாநிலத்தில் விளையாட்டுக்களை ஊக்குவிக்க இப்பணம் பயன்படுத்தப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அரசுப்பணியில் இருக்கும் விளையாட்டு வீரர்களுக்கான ஊக்கப்பரிசுத்தொகையை அரசு ஏற்கனவே நிறுத்திவைத்துள்ளது.இந்த அறிவிப்பு சர்ச்சைக்குள்ளாகி உள்ளது. அரசின் அறிவிப்புக்கு மாநிலத்தில் உள்ள வீரர்கள், வீராங்கனைகள் எதிர்ப்புகளை தெரிவித்து வருகின்றனர்.
இதுகுறித்து குத்துச்சண்டை வீராங்கனை பபிதா கூறுகையில் ‘‘ஒவ்வொரு நாடும், மாநிலமும் விளையாட்டை, வீரர்களை ஊக்குவித்து வருகிறது. ஹரியானா அரசு வீரர்களுக்கு தண்டனை வழங்குகிறது என்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here