தேசிய அளவில் தலித் முன்னணி! முன்னாள் நீதிபதி கர்ணன் திட்டம்!!

சென்னை: தேசிய அளவில் தலித் முன்னணியை உருவாக்க முன்னாள் நீதிபதி கர்ணன் திட்டமிட்டு வருகிறார். அடுத்தாண்டு நாடாளுமன்ற தேர்தல் வரவுள்ளது. இந்நிலையில் ஆளும் கட்சியான பாஜகவுக்கு எதிராக ஓரணியில் எதிர்க்கட்சிகள் இணைந்துள்ளன.இதனால் கடந்தமாதம் நடந்த இடைத்தேர்தலில் அவை கூடுதல் வெற்றிபெற்றுள்ளன.
இந்நிலையில் அனைத்து மாநிலங்களிலும் தலித் கட்சிகளை ஒருங்கிணைத்து புதிய அணியை உருவாக்க திட்டமிட்டுவருகிறார் கர்ணன். கர்ணன் அரசியல்கட்சி ஒன்றை தொடங்கியுள்ளார்.ஊழல் எதிர்ப்பு டைனமிக் கட்சி என்ற பெயரில் ஊழலை வேரறுப்பதை கொள்கையாக இக்கட்சி கொண்டுள்ளது. இக்கட்சியை அனைத்து மாநிலங்களுக்கும் விரிவுபடுத்துவது, மாநில அளவில் பலம்பெற்றுள்ள தலித் கட்சிகளை ஒருங்கிணைப்பது, தேசிய அளவில் 3வது அணியாக தலித் அணியை உருவாக்குவது போன்ற திட்டங்களுடன் அரசியலில் தனது பயணத்தை கர்ணன் துவங்கியுள்ளார்.குஜராத்தில் தலித் எம்.எல்.ஏ. ஜிக்னேஷ்மேவானியுடன் சமீபத்தில் அவர் சந்தித்தார். தேசிய அளவில் மூன்றாவது அணி உருவாவது குறித்து ஆலோசித்து வருகிறார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here