மோடியை எதிர்த்து கர்ணன் போட்டி!

சென்னை: கடலூர் மாவட்டத்தை சேர்ந்த கர்ணன் கொல்கத்தா உயர்நீதிமன்ற நீதிபதியாக பணியாற்றினார். அப்போது உச்சநீதிமன்ற நீதிபதிகளை அவமதித்தார் என்று அவருக்கு சிறைத்தண்டனை கிடைத்தது. ஓய்வுபெற்ற பின்னர் தனது அரசியல் பணிகளை துரிதப்படுத்தினார் கர்ணன்.சென்னையில் ஊழல் எதிர்ப்பு செயலாக்க கட்சியின் கொடியை அறிமுகப்படுத்தி அவர் பேசியதாவது: நாட்டில் ஊழலை ஓழிப்பதற்காக புதிய கட்சியை தொடங்கியுள்ளேன்.
அரசு துறையில் ஊழல் மலிந்து விட்டது. ஊழலை ஒழித்து ஜனநாயகத்தை பாதுகாப்போம்.பாராளுமன்ற தேர்தலில் 543 தொகுதியிலும் போட்டியிட்டு வெற்றி பெற்று ஆட்சி அமைப்போம். எங்கள் கட்சியில் தொண்டர்கள் குறைவுதான். ஆனால் மக்களின் ஆதரவு அதிகமாக உள்ளது. தமிழகம், புதுவையில் உள்ள 40 தொகுதிகளையும் கைப்பற்றுவோம்.கட்சிக்கு தேவையான நிதியை யாரிடமும் திரட்ட மாட்டேன். நானே எனது பணத்தை செலவு செய்வேன்.மற்ற கட்சிகள் எங்களுடன் கூட்டணி அமைக்க விரும்பினால் ஏற்றுக் கொள்வோம் என்றார். நாடாளுமன்ற தேர்தலில் வேட்பாளர்களுக்கு ஒரு லட்சம் கட்சியே அளிக்கும் என்றும், பிரதமர் வாரணாசியில் போட்டியிட்டால் அவரை
எதிர்த்து போட்டியிடவும் கர்ணன் திட்டமிட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here