காவல் நிலையத்துக்கு வந்த யானை!

கார்வார்: வடக்கு கர்நாடகாவை சேர்ந்த ஹலியால் நகரில் யானை ஒன்று நகருக்குள் புகுந்து ரகளையில் ஈடுபட்டது.ஹலியால் நகரில் இன்று காலையில் ஆண் யானைக்குட்டி ஒன்று ஊருக்குள் வந்துள்ளதாக தகவல் பரவியது. இதனைத்தொடர்ந்து மக்கள் வீட்டுக்குள் முடங்கினர்.  மார்க்கெட் சாலை வழியாக ஊருக்குள் புகுந்தது 4வயது ஆண் யானை.
தெருக்களில் அங்குமிங்கும் சுற்றித்திருந்த யானை காவல் நிலையம், நீதிமன்றம் இருக்கும் பகுதியில் நடமாடியது.   அப்பகுதியில் பொதுமக்களை காவல் துறையினர் உஷார் படுத்தினர். காவல் நிலையத்தின் நுழைவாயிலை பூட்டி யானை வராமல் தடுத்தனர்.
வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் விரைந்துவந்து யானையை சம்ப்ரனி வனப்பகுதிக்குள் விரட்டினர்.   யானையால் சுமார் ஒரு ஏக்கர் நிலப்பரப்பில் பயிர் சேதமுற்றது தெரியவந்துள்ளது. யானையால் யாரும் பாதிக்கப்படவில்லை.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here