சுற்றுப்புறச் சுவர் இடிந்து 2 சிறுவர்கள் பலி!

சென்னை: அன்சர் சென்னை அமைந்நகரையை சேர்ந்தவர். இவர் வீட்டைச் சுற்றி 6 அடி உயரம் கொண்ட சுவர் உள்ளது. இந்த சுவரில் விரிசல் இருந்துள்ளது.அன்சர் மற்றும் பைரோஸ் இவர்களின் மகன்கள் தயான் (8), முஸ்கான் (4). இருவரும் சுவரின் அருகில் விளையாடினர். எதிர்பாராமல் சுவர் இடிந்து அவர்களின் மீது விழுந்துள்ளது.சத்தம் கேட்டு வந்த அன்சர் இடிபாடுகளில் சிக்கியிருந்த இருவரையும் காப்பாற்ற முயன்றார். தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார். விரைந்து வந்தவர்கள் இருவரையும் மீட்டனர்.சம்பவ இடத்திலேயே முஸ்கான் உயிரிழந்தார். படுகாயமடைந்த தயான் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். தயானை பரிசோதித்த மருத்துவர்கள் வழியிலேயே உயிரிறந்து விட்டதாக தெரிவித்தனர். இது அப்பகுதியில் உள்ளவர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here