கோவை-பெங்களூர் மாடி ரயில் சேவை துவக்கம்!

கோவை: கோவை-பெங்களூர் நகரங்களுக்கு இடையே ஏசி வசதியுடன் மாடி ரயில் சேவை துவக்கப்பட்டது.
கோவையில் இருந்து இன்று காலை மத்திய ரயில்வே இணையமைச்சர் ராஜன் கொகெயின், மத்திய நிதித்துறை இணையமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் கொடியசைத்து ரயில் சேவையை துவக்கினர்.2016ரயில்வே பட்ஜெட்டில் இந்த ரயில்சேவை குறித்து அறிவிப்பு வெளியானது. மாடி ரயில் ஏசி வசதியுடன் 10 பெட்டிகளை கொண்டது. 3பெட்டிகளில் பயணிகள் உணவு சாப்பிட வசதியாக டைனிங்டேபிள்கள் இடம்பெற்றுள்ளன.
கோவையில் இருந்து காலை 5.15க்கு புறப்படும் ரயில் 22666 மதியம் 12.40க்கு பெங்களூர் சென்றடையும்.
பெங்களூரில் இருந்து மதியம் 2.15க்கு புறப்படும் ரயில் 22665 இரவு 9.15க்கு கோவை வந்தடையும்.
கிருஷ்ணராஜபுரம், குப்பம், சேலம், ஈரோடு, திருப்பூர் நகரங்களில் இந்த ரயில் நின்று செல்லும்.ரயில் கட்டணம் பெரியவர் ரூ.619. சிறியவர் ரூ.308. 58வயதுக்கும் அதிகமான பெண்களுக்கு ரூ.350 ஆகும். 60வயதுக்கும் அதிகமான ஆண்களுக்கு ரூ.402 ஆகும்.
ரயில் சேவையை துவக்கிவைத்து அமைச்சர் ராஜன்கொகெயின் பேசுகையில், ரயில்வே துறையின் வளர்ச்சியில் தென்னகரயில்வே முக்கியப்பங்கு வகிக்கிறது.
செங்கோட்டை-புனலூர் ரயில்சேவை ஜூன்9ல் துவக்கப்படுகிறது. இதனால் தமிழ்நாடு, கேரளா இடையே பயணிகள் வரத்து அதிகரித்து சுற்றுலாத்துறை வளர்ச்சிபெறும்.வீரபாண்டி, புதுப்பாளையம் ரயில் நிலையங்களில் உள்ளூர் எம்பிக்களின் தொகுதிவளர்ச்சி நிதியுதவியுடன் பிளாட்பாரங்கள் மேம்படுத்தப்படும்.
அனைத்து ரயில் பெட்டிகளிலும் பயோ டாய்லெடுகள் டிசம்பர்2018க்குள் பொருத்தப்பட்டுவிடும்.
கோவை-மேட்டுப்பாளையம் மிமு ரயில்சேவை, கோவை-மதுரை பகல்நேர ரயில் சேவை விரைவில் துவக்கப்படும் என்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here