இஸ்லாமியர்களுக்கு உதவ வேண்டாம்! பாஜக எம்.எல்.ஏ. சர்ச்சை பேச்சு!!

பிஜாப்பூர்:இஸ்லாமியர்களுக்கு பாஜக வினர் உதவக்கூடாது என்று எம்.எல்.ஏ. பேசியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கர்நாடகத்தில் காங்கிரஸ்–ஜனதா தளம்(எஸ்) கூட்டணி ஆட்சி அமைந்துள்ளது. 104இடங்களில் வெற்றிபெற்றும் பாஜக எதிர்க்கட்சி வரிசையில் அமர்ந்துள்ளது.இந்நிலையில் பிஜாப்பூரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பங்கேற்று பேசினார் பாஜக எம்.எல்.ஏ. பசவராஜ் கவுடா.பாஜக கவுன்சிலர்கள் யாரும் இஸ்லாமியர்களுக்கு எந்த வேலையையும் செய்து தரக் கூடாது.
நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில், இஸ்லாமியர்கள் யாரும் பாஜகவிற்கு வாக்களிக்கவில்லை. எனவே இந்துக்களுக்கு மட்டுமே உதவ வேண்டும்.எனது அலுவலகத்திற்கு தொப்பி மற்றும் புர்காவுடன் யாரும் வரவேண்டாம் என்றும் அவர் கூறினார்.
இப்பேச்சு மாநிலத்தில் பலத்த சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
கர்நாடக பாஜக எம்.எல்.ஏவின் இந்த பேச்சு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here