வங்கிகளின் நிரந்தர வைப்புத்திட்டம்! வட்டிவிகிதம் அதிகரிக்க வாய்ப்பு!!

மும்பை: வங்கிகளுக்கு இடையேயான வட்டிவிகிதம் 2மாதத்துக்கு ஒருமுறை மாற்றியமைக்கப்படும். இரு தினங்களுக்கு முன்னர் ரிசர்வ் வங்கி இதுதொடர்பாக அறிவிப்பு வெளியிட்டுள்ளது.ரெப்போ ரேட் எனப்படும் வட்டிவிகிதம் 0.25% அதிகரிக்கப்பட்டது. இதனால் ரெப்போ ரேட் தற்போது 6.25% என்றளவில் உள்ளது. பணவீக்கம், பெட்ரோல் விலையேற்றம் ஆகியவற்றை கருத்தில் கொண்டு இந்த வட்டிவிகிதம் 4ஆண்டுகளுக்கு பின் உயர்த்தப்பட்டது.மேலும், வங்கிகளின் கையிருப்பு பணத்தின் அளவு அதிகரிக்கவும் ரிசர்வ்வங்கி உத்தரவிட்டுள்ளது. இதனால், வங்கிகள் பல்வேறு கடன் திட்டங்களில் அளிக்கும் கடன் தொகை வரம்பு அதிகரிக்கும்.கடனை திருப்பிச்செலுத்தும் தவணைக்கால அளவும் அதிகரிக்க வாய்ப்புள்ளது. மேலும், நிரந்தரவைப்புத்தொகை அதாவது பிக்சட் டெபாசிட்டுகளுக்கான வட்டிவிகிதம் அரை சதவீதம் அதிகரிக்கும். நாட்டின் பொருளாதார நிலையை கருத்தில் கொண்டு நீண்டகாலத்துக்கான கடன் பத்திரங்கள், நிரந்தரவைப்பு தொகை ஆகியவற்றில்
முதலீடு செய்வது பாதுகாப்பானதாகவும் கூடுதல் பலன் தருவதுமாக இருக்கும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here