உத்திரப்பிரதேசம்: கணேஷ் சங்கர் வித்யார்த்தி நினைவு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை உத்தரப்பிரதேச மாநிலம் கான்பூரில் உ.பி.அரசின் கீழ் இயங்குகிறது. குழந்தைகள் உட்பட 11 பேர் அவசர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அங்குள்ள குளிர்சாதன பெட்டியில் கோளாறு ஏற்பட்டுள்ளது.இரவு முழுவதும் காற்றோட்ட வசதி இல்லமால் நோயாளிகள் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். இந்நிலையில் 4 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். நோயாளிகளின் உறவினர்கள் மருத்துவமனையை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.மாவட்ட நீதிபதி சுரேந்திர சிங் மருத்துவமனைக்கு விரைந்து வந்தார். மருத்துவர்களிடம் விசாரணை நடத்தினார். உடனடியாக 2 ஏசி இயந்திரங்களைப் பொருத்துமாறு உத்தரவிட்டுள்ளார்.இரண்டு பேர் மாரடைப்பு காரணமாகவும், இரண்டு பேர் நாள்பட்ட நோய் காரணமாகவும் உயிரிழந்ததாகவும் மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. ஏ.சி இயந்திரத்தில் கோளாறு ஏற்பட்டது உண்மைதான். ஆனால் உடனடியாக சரிசெய்யப்பட்டுவிட்டது என்று மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.