கணவரிடம் கூட ஏடிஎம் பின்நம்பர் சொல்லாதீங்க!!

பெங்களூர்: கணவருக்கு கூட ஏடிஎம் ’பின் நம்பர்’ சொல்லக்கூடாது என்று வலியுறுத்தி வழக்கில் வெற்றிபெற்றுள்ளது ஸ்டேட்பேங்க் ஆப் இந்தியா.பெங்களூரை சேர்ந்த வந்தனா எஸ்பிஐ வங்கியில் சேமிப்பு கணக்கு வைத்துள்ளார்.
2013, நவம்பர் 14ல் தனது ஏடிஎம் கார்டை கணவர் ராஜேஷ்குமாரிடம் கொடுத்தார்.
வங்கியில் இருந்து ரூ.25ஆயிரம் எடுத்துவருமாறு கூறினார்.வங்கி ஏடிஎம்மில் பணம் தரப்பட்டது என ரசீதுவந்தது. ஆனால், பணம் வரவில்லை.
இதுகுறித்து ராஜேஷ்குமார் உடனே வங்கியின் கவனத்துக்கு கொண்டுசென்றார்.
பணம் ஓரிரு நாளில் வங்கிக்கணக்கில் வரவுவைக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.
ஒருமாதம் ஆகியும் பணம் வரவு வைக்கப்படவில்லை.ஏடிஎம் மையத்தில் இருந்த சிசிடிவி காட்சிகளில் பணம் வராதது தெளிவாக தெரிந்தது. ஆனால், ராஜேஷ்குமார் அதில் பதிவாகவில்லை. இருந்தபோதும் பணத்தை ராஜேஷ்குமார் எடுத்துள்ளார் என்று வங்கி அதிகாரிகள் சந்தேகம் கொண்டனர்.வங்கிகள் குறைதீர் அமைப்பான ஆம்புட்ஸ்மெனும் ’பின் நம்பரை மற்றவர் பயன்படுத்தியதால் நிவாரணம் தரமுடியாது’ என்று கூறிவிட்டது.
இதனைத்தொடர்ந்து நுகர்வோர் மன்றத்தில் தம்பதியினர் புகார் செய்தனர்.
3ஆண்டுகள் இதுதொடர்பாக விசாரணை நடந்து தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
அதில், வந்தனா வங்கிக்கடன் அட்டைக்காக வைத்திருந்த ‘பின் நம்பரை’ மற்றவரிடம் பகிர்ந்தது தவறு.அவரது அவசர தேவைக்காக பணம் வேண்டுமென்றால் செல்ப் செக் அல்லது கணவரை பணம் எடுத்துவருவதற்கு அனுமதிக்கிறேன் என்பதற்கான அங்கீகார கடிதம் கொடுத்திருக்க வேண்டும்.
எனவே, வங்கி விதிமுறைகள் மீறப்பட்டுள்ளதால் இவ்வழக்கில் மனுதாரருக்கு நிவாரணம் பெற்றுத்தர இயலவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here