கேரிபேக்கில் சுற்றி வீசப்படும் குழந்தை!

உத்தரப்பிரதேசம்: பிறந்து ஒருவாரமே ஆன குழந்தையை கேரிபேக்கில் சுற்றி வீதியில் விட்டுச்செல்லும் தாயின் பகீர் விடியோ வெளியாகி உள்ளது. அம்மாநிலத்தில் உள்ள முசாபர்புர் நகரில் ஒதுக்குப்புறமான பகுதியில் அடுக்குமாடி குடியிருப்பு உள்ளது.அக்குடியிருப்பின் குறுகிய சந்தில் கார் ஒன்று வருகிறது.காரின் கதவை திறக்காமல் அதன் முன்னிருக்கையில் இருந்தவாறே ஒரு பெண் கேரிபேக் ஒன்றை படியில் வைக்கிறார். பின்னர் கார் வேகமாக சென்றுவிடுகிறது.அந்த கேரிபேக்கில் பிறந்து ஒருவாரமே ஆன ஆண் குழந்தை இருந்தது தெரியவந்தது.
முசாபர்புர் போலீசார் குழந்தையை மீட்டு அரசு மருத்துவமனையில் ஒப்படைத்தனர்.இருதயம், நுரையீரல் ஆகியவை பலகீனமாக அக்குழந்தைக்கு உள்ளதால் இன்குபேட்டரில் வைத்து குழந்தை பராமரிக்கப்படுகிறது. அதன் உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளது என்று டாக்டர்கள் தெரிவித்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here