காதல் கணவனை கொன்ற மனைவி?

குஜராத்: விபுல் பரியா குஜராத் மாநிலம் ராஜ்கோட்டை சேர்ந்தவர். மருத்துவரான இவர் தனது மனைவி பூஜா சவ்டாவுடன் வசித்து வந்துள்ளார். இரு தினங்களுக்கு முன்னர் வீட்டில் தூக்கில் சடலமாக தொங்கியுள்ளார்.தகவலறிந்து போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். சடலத்தை கைப்பற்றிவிட்டு பிரேத பரிசோதனைக்கு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.இந்நிலையில் பூஜா தனது குடும்பத்தாருடன் சேர்ந்து விபுலை கொலை செய்துவிட்டதாக விபுலின் அண்ணன் திலிப் புகார் தெரிவித்துள்ளார். விபுலை கொன்றுவிட்டு தூக்கில் தொங்கவிட்டுள்ளார்கள், இது குறித்து விசாரிக்க வேண்டும் என கூறியுள்ளார்.போலீசார், பிரேத பரிசோதனை முடிவுக்காக காத்துள்ளோம், சமீபகாலமாக விபுலும் பூஜாவும் தொடர்ந்து சண்டை போட்டுள்ளார்கள் என முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளதாக கூறியுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here