ஊனமடைந்த தெருநாய்க்கு சக்கரவண்டி!

மும்பை:ரயிலில் அடிபட்டு ஊனமடைந்த தெருநாய்க்கு மறுவாழ்வு கிடைத்துள்ளது.
மும்பையில் தெருநாய்களுக்கு சிகிச்சை அளித்து பராமரித்து வரும் தெருநாய் நலக்குழு என்ற அமைப்பு இயங்கி வருகிறது.இந்த அமைப்பின் இலவச தொலைபேசி எண்ணுக்கு அழைத்து தெருநாய் குறித்த விபரம் தெரிவித்தால் போதும். அவர்கள் விரைந்துவந்து நாய்களை அழைத்துச்செல்வார்கள்.
கடந்த மார்ச் 13ம் தேதி இக்குழுவுக்கு போன்வந்தது. மும்பை மகாலட்சுமி ரயில் நிலையத்தில் ரயிலில் அடிபட்டு ஒரு நாய் கிடக்கிறது என்று தகவல் அளிக்கப்பட்டது.இதனைத்தொடர்ந்து இக்குழுவின் நிர்வாகி குன்ஜன், டாக்டர் தனன்யா ஆகியோர் ரயில் நிலையம் விரைந்தனர்.
இரண்டாவது ப்ளாட்பாரத்தில் மின்சார ரயில் மோதி முன்னங்கால்கள் முறிந்தநிலையில் பெண் நாய் ஒன்று கதறிக்கொண்டிருந்தது.

அதனை காப்பாற்றி அலுவலகத்துக்கு கொண்டுவந்தனர். அந்நாய்க்கு அனயா என்று பெயரிட்டு 5மாதங்கள் தொடர்ந்து சிகிச்சை அளித்தனர்.
3ஆபரேசன்கள் செய்யப்பட்டு அனன்யா தற்போது ஆரோக்கியமாக உள்ளது. இருப்பினும் அதன் முன்னங்கால்கள் அகற்றப்பட்டன.
அதற்காக பிரத்யேகமாக சக்கரநாற்காலி உருவாக்கப்பட்டது.
7வயது அனயாவை தற்போது அக்‌ஷதா என்பவர் தத்தெடுத்துள்ளார்.
அனயாவின் கதையை அவர் இணையத்தில் வெளியிட அச்செய்தி அதிவேகமாக பகிரப்பட்டு வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here