தமிழகத்தை சேர்ந்தவர் ஆந்திர காவல் நிலையத்தில் பலி!

ஆந்திரா: தமிழகத்தைச் சேர்ந்த 9 பேரை ஆந்திர போலீசார் தென்னேரி பகுதியில் செயின் பறிப்பில் ஈடுபட்டதாக கைது செய்துள்ளனர்.சத்தியவேடு காவல் நிலையத்தில் வைத்து அவர்களிடம் விசாரணை மேற்கொண்டுள்ளனர். விசாரணையின்போது 9 பேரையும் போலீசார் கடுமையாக தாக்கியதாகக் கூறப்படுகிறது.திருவள்ளூர் மாவட்டம் செங்குன்றம் மொண்டியம்மன் நகரைச் சேர்ந்த ராஜா போலீசாரின் தாக்குதலால் உயிரிழந்துள்ளார். போலீசார் நேற்று இரவு ராஜாவுக்கு வலிப்பு வந்ததாகவும் அதனால் உயிரிழப்பு நடந்திருக்கலாம் என்று தெரிவித்துள்ளனர்.சத்தியவேடு அரசு மருத்துவமனையில் ராஜாவின் உடல் பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here