தமிழக, கர்நாடகா விவசாயிகள் கலந்து பேச வேண்டும்! கமலஹாசன் பேச்சு!!

சென்னை: மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர், நடிகர் கமல்ஹாசன் கர்நாடகா முதல்வர் குமாரசாமியை காவிரி விவகாரம் தொடர்பாக நேரில் சந்தித்து பேசினார்.இதற்காக கமல்ஹாசனுக்கு வாழ்த்து தெரிவிக்க அய்யாக்கண்ணு உள்ளிட்ட விவசாய சங்கங்களை சேர்ந்தவர்கள் அவரை நேரில் சந்தித்தனர். அப்போது அவருக்கு வீரவாள் மற்றும் ஏர்க்கலப்பையை பரிசாக அளித்தனர்.இதனையடுத்து செய்தியாளர்களை சந்தித்த கமல்ஹாசன் பேசுகையில் காவிரி விவகாரத்தில் கர்நாடகா விவசாயிகளும், தமிழக விவசாயிகளும் கலந்து பேசினால் அரசியல்வாதிகள் உள்ளே நுழைய முடியாது.விவசாயிகளுக்கு நன்றிக் கடன் செலுத்தவே கர்நாடகா சென்றேன். என்னை யார் என கேட்கின்றனர். நான் ஆயிரத்தில் ஒருவர் இல்லை கோடியில் ஒருவன் என்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here