அடுத்த படத்திற்கு தயாரான சூப்பர்ஸ்டார்!

சென்னை: காலா படம் வெளியானதையடுத்து அடுத்த படத்தின் பணிகளை ரஜினிகாந்த் துவக்கியுள்ளார்.கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கவுள்ள புதிய திரைப்படத்தின் ஷூட்டிங் பணிகளுக்காக நடிகர் ரஜினிகாந்த் டேராடூன் சென்றார்.இது குறித்து ரஜினியின் இளைய மகள் சவுந்தர்யாரஜினிகாந்த் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.சன் பிக்சர்ஸ் தயாரிக்கவிருக்கும் இப்படத்துக்கு அனிருத் இசையமைக்கிறார். இப்படத்தின் ஷூட்டிங் பணிகளை தொடர்ச்சியாக நடத்தி முடிக்க படக்குழு திட்டமிட்டுள்ளனர். இப்படத்தில் ரஜினி இளமையான கதாபாத்திரத்தில் நடிக்கவிருப்பதாகவும் தகவல்கள் கசிந்துள்ளன. விஜய் சேதுபதி, பாபி சிம்ஹா, யோகி பாபு, மேகா ஆகாஷ் உள்ளிட்டோர் நடிக்கிறார்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here