சவுதி, அமீரகம் வளர்ச்சிக்காக ஐந்தாண்டு திட்டம்!

ஜிட்டா: சவுதிஅரேபியா, அமீரக நாடுகள் இணைந்து ஐந்து ஆண்டு திட்டத்தை செயல்படுத்த உள்ளன.
ஜிட்டா நகருக்கு அமீரகத்தின் பட்டத்து இளவரசரும் அந்நாடின் ராணுவ துணை கமாண்டருமான முகமது பின் சயீத் வருகை தந்தார்.விமான நிலையத்தில் சவுதி பட்டத்து இளவரசர் முகமதுபின் சல்மான் அவரை வரவேற்றார்.
இருநாட்டு பட்டத்து இளவரசர்கள் மற்றும் அதிகாரிகள் அரண்மனையில் ஆலோசனை நடத்தினர்.
இரு நாடுகளுக்கும் இடையே பாதுகாப்பு, பொருளாதாரம் துறைகளில் 44ஒப்பந்தங்கள் கையெழுத்தாகி உள்ளன.

இவற்றை ஐந்து ஆண்டுகளுக்குள் செயல்படுத்துவது என்றும் அதற்காக கூட்டுக்கமிட்டி ஒன்றை நியமிப்பது என்றும் முடிவாகி உள்ளது.
இதுகுறித்து இரு இளவரசர்களும் அளித்தபேட்டியில் அரபுநாடுகளிடையே முன்மாதிரியான வளர்ச்சியை இருநாடுகளும் முன்னெடுத்துச்செல்ல உள்ளன.
இருநாட்டு மக்களும் மகிழ்ச்சி, சுதந்திரத்துடன் சிறப்பாக வாழ்வதற்கான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும் என்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here