ரூ.40 லட்சம் நகைகள் கடத்தல்! மலேசியா பெண் சிக்கினார்!!

திருச்சி: திருச்சி விமான நிலையத்திற்கு மலேசியாவில் இருந்து தனியார் விமானம் வந்தது. பயணிகளிடம் சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர்.மலேசியாவைச் சேர்ந்த மஜ்துனிசா பானு என்பவர் தங்க நகைகள் அதிகளவில் அணிந்து வந்தார். இது, அதிகாரிகளுக்கு பெருத்த சந்தேகத்தை ஏற்படுத்தியது.அதிகாரிகள் இதுகுறித்து விசாரணை நடத்தியபோது அந்த நகைகள் மலேசியாவில் இருந்து திருச்சிக்கு கடத்தி வரப்பட்டது தெரியவந்தது. நகைகளை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.அந்த நகைகள் மொத்தம் 1299 கிராம் இருந்தன. அவற்றின் மதிப்பு ரூ.40 லட்சம். அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here