அடாத மழையிலும் விடாது பணி!

மும்பை: தென்மேற்கு பருவமழைக்காலம் துவங்கிவிட்டது. இதனால் மும்பையில் மழை கொட்ட தொடங்கியுள்ளது. கடந்த 5தினங்களாக முன் மழைக்கால மழை எதிர்பார்த்ததை விடவும் அதிகமாக மும்பையில் கொட்டியது.இதனால் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. கடந்த திங்கட்கிழமை மாலை திடீரென்று வெள்ளம் வந்ததால் போக்குவரத்து பல இடங்களில் பாதிக்கப்பட்டது.ஆனால், கண்டிவலி கிழக்குப்பகுதியில் மட்டும் வழக்கம்போல் போக்குவரத்து சீராக இருந்தது. இதற்கு காரணம் அங்குள்ள முக்கிய சிக்னல் பகுதியில் பணியாற்றிய போக்குவரத்து போலீஸ்காரர் நந்தகுமார் ஆவார்.கொட்டிய மழையில் ரெயின்கோட் அணியாமல் மக்கள் நலனை கருத்தில்கொண்டு அவர் போக்குவரத்தை ஒழுங்கு செய்துவந்தார். அவரது விடியோ இணையத்தில் தற்போது வைரலாகி வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here