ரஜினியை எதிர்ப்பேன்! ரஞ்சித் அதிரடி!!

சென்னை:மக்களுக்கு எதிராக செயல்பட்டால் ரஜினியையும் எதிர்ப்பேன்; நான் ஒரு அரசியல்வாதிதான் என்று தெரிவித்தார் இயக்குநர் ரஞ்சித்.காலா படம் வெளியாகிய முதல்நாளில் ரசிகர்கள் என்ன நினைக்கிறார்கள் என்பதை தெரிந்து கொள்ள தியேட்டருக்கு வந்திருந்தார் ரஞ்சித்.
படம் முடிந்ததும் செய்தியாளர்களை சந்தித்தார். அவர் கூறியவை:
ரஜினியின் அரசியலுக்காக இப்படம் எடுக்கப்படவில்லை. மக்களின் பிரச்சினைகள் குறித்து எடுத்துள்ளோம்.மக்கள் பிரச்சினையைப் பேசுவதுதான் அரசியல் நோக்கம். சமுதாயத்தில் ஒரு பாகுபாடு உள்ளது. அந்தப் பாகுபாட்டை உடைப்பதற்கு கலையைப் பயன்படுத்துவேன்.
என்னைச் சுற்றி அரசியல் இருப்பதால் அதுகுறித்துதான் நான் பேசமுடியும்.
நான் எடுக்கும் அனைத்துமே அட்டகத்தியின் தொடர்ச்சிதான்.காலா கர்நாடகாவில் வெளியாகாதது கவலை அளிக்கிறது. இன்றே அங்கும் வெளியாவதற்கான பணிகள் நடைபெற்றுவருகின்றன.
பேஸ்புக்கில் இந்தப் படத்தை லைவ் செய்த தம்பிக்கு நன்றி.
நானும் ஒரு அரசியல்வாதிதான். “ரஜினி அரசியல் கட்சி தொடங்கினால் மக்களுக்காக இணைந்து பணியாற்றுவேன், மக்களுக்கு எதிராக செயல்பட்டால் முரண்படுவேன்” என்றார் ரஞ்சித்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here