காலா படத்தில் ப்ளஸ், மைனஸ்!

சென்னை: காலா படத்தின் விமர்சனங்கள் சுடச்சுட வெளியாகி உள்ளன. படத்தின் ப்ளஸ், மைனஸ் குறித்து விமர்சனங்கள் தெரிவிக்கின்றன.நெல்லையை பூர்விகமாக கொண்ட வேங்கையன் மும்பையில் பிழைக்க செல்கிறார்.
மும்பைக்கு குடிபெயருவோருக்கு அனைத்து உதவிகளும் செய்கிறார்.அவர்கள் அனைவரும் வசிக்கும் பகுதி தாராவியாக உருவாகிறது.அதனை காலிசெய்துவிட்டு அடுக்குமாடி குடியிருப்பு கட்ட அரசியல் தலைவர் நினைக்கிறார். அதனால் ஏற்பட்ட போட்டியில் வேங்கயன் கொல்லப்படுகிறார். அவர் மகனான காலா என்ற கரிகாலன் தாராவியை மக்களுக்காக மீட்பதே திரைப்படம்.முதல்பாதியில் ப்ளாஷ்பேக், குடும்பம், செண்டிமெண்ட் என்று நகரும் படம் இடைவேளைக்கு பின் விறுவிறுப்பாக செல்கிறது. வில்லன் நானா படேகர் நடிப்பில் ரஜினிக்கு சவால் விடுக்கிறார்.ஜல்லிக்கட்டு, தாமிரபரணி, மாஞ்சோலை போராட்டங்களை சில காட்சிகள் நினைவு படுத்துகின்றன.குடும்பத்துடன் தியேட்டருக்கு வர முதல்பாதியும், ரஜினி ரசிகர்களை மீண்டும் வரவழைக்க இரண்டாவது பாதியும் பயன்படும். ரஞ்சித் தனது போராட்டக்குரலை ரஜினி வாய்சாக வெளிப்படுத்தியுள்ளார். வேங்கையன் மகன் ஒத்தையில நிக்குறேன் என்ற ரஜினி பஞ்ச் அரசியல் களத்துக்குத்தான் என்று புரியவைக்கிறார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here