வளர்ச்சி இருக்கு! மகிழ்ச்சி இல்லை!! ஆர்.எஸ்.எஸ். விழாவில் பிரணாப் பேச்சு!!

நாக்பூர்:இந்தியாவில் மகிழ்ச்சி இல்லை ஆனால் வளர்ச்சி உள்ளது என்று தெரிவித்தார் முன்னாள் ஜனாதிபதி பிரணாப்முகர்ஜி.

மகாராஷ்டிர மாநிலம் நாக்பூரில் நடைபெற்ற ஆர்.எஸ்.எஸ். பயிற்சிமுகாம் நிறைவு விழாவில் முன்னாள் ஜனாதிபதி பிரணாப்முகர்ஜி பங்கேற்றார்.
இதற்கு காங்கிரஸ் தலைவர்கள் பலர் எதிர்ப்பு தெரிவித்தனர். இருப்பினும் அவர் நிகழ்ச்சியில் பங்கேற்றார்.நிகழ்ச்சியில் அவர் பேசுகையில், தேசம், தேசியவாதம், தேசப்பற்று ஆகிய மூன்றுகுறித்த கருத்துக்களை தெரிவிக்க வந்துள்ளேன்.
இந்தியாவை கண்டறிந்த 5ம் நூற்றாண்டை சேர்ந்த வெளிநாட்டினர் நமது நாட்டின் கட்டமைப்பை வியந்து பாராட்டியுள்ளனர்.
நமது பல்கலைக்கழகங்கள் 800 ஆண்டுகள் பழமையானவை. மிகச்சிறந்த சிந்தனையாளர்களை கொண்டிருந்தது.
சாணக்கியரின் அர்த்தசாஸ்திரம் போன்ற நூல்கள் இக்காலத்தில் இயற்றப்பட்டவை.ஐரோப்பிய ஆட்சிக்காலத்தில் ஒரேநாடு ஒரேமொழி தத்துவம் வளரத்தொடங்கியது.
ஒரே உலகம் ஒரேகுடும்பம் என்ற தத்துவம் அதன்முன்னரே நம்மால் கடைபிடிக்கப்படுகிறது.
வேற்றுமையில் ஒற்றுமை, பொறுமை, பன்மைத்தன்மை நமது கலாச்சார பெருமை கொண்டவையாகும்.நமது தேசத்தை ஆண்ட பல அரசர்கள் தம் ராஜ்யங்களை இழந்துள்ளனர்.
முஸ்லிம்கள் 600ஆண்டுகள் ஆட்சிக்காலத்தில் கிழக்கிந்திய கம்பெனியினர் போர்நடத்தி பெருவாரியான நிலத்தை கைப்பற்றி ஆட்சிநடத்தினர்.அவர்களது ஆட்சிக்காலத்தில் மையப்படுத்தப்பட்ட ஆட்சிமுறை அறிமுகப்படுத்தப்பட்டது.
இந்தியதேசியவாதம் திலகர் போன்ற தலைவர்களால் வலியுறுத்தப்பட்டு தேசப்பற்று ஊட்டப்பட்டது. காந்தியடிகளின் தேசியவாதம் குறித்து நேரு தனது டிஸ்கவரி ஆப் இந்தியாவில் விவரித்துள்ளார்.நமது அரசியல் சாசனத்தில் உள்ள 300க்கும்மேற்பட்ட ஷரத்துக்கள்,  12அட்டவணைகள் வேற்றுமையில் ஒற்றுமையுடன் மக்கள் அமைதியாகவும், மகிழ்ச்சியாகவும் இருப்பதை வலியுறுத்துகின்றன.

பல்வேறு மொழிகள், 37மதங்கள், என்று நமது நாடு பரந்து விரிந்து காணப்படுகிறது. இதில் ஒரே மொழி, ஒரே இனம் என்ற குரலும் ஒலிக்கிறது. நாம் இந்தியர்கள், நாம் பாரதத்தை சேர்ந்தவர்கள் என்று ஒருங்கிணைந்துள்ளனர்.

புள்ளிவிபரங்கள் நாம் வளர்ந்து வரும் நாடு என்பதை தெரிவிக்கின்றன. அதே நேரம் மகிழ்ச்சிக்கான குறியீடுகளை வரிசைப்படுத்தி ஒரு புள்ளிவிபரம் வெளியிடப்பட்டுள்ளது. அதில் நாம் 133வது இடத்தில் உள்ளோம்.  மக்கள் மகிழ்ச்சியுடன் இருந்தால் மன்னர் மகிழ்ச்சியுடன் இருக்க முடியும்.  நாடு முழுவதும் மகிழ்ச்சியுடன் இருக்க அனைவரும் ஒன்றிணைந்து செயல்படவேண்டும். இவ்வாறுபிரணாப் முகர்ஜி பேசினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here