15விநாடிகளில் உலகப்புகழ்பெற்ற பெண்!

டெல்லி: டெல்லியை சேர்ந்த சோம்வதி மஹாவர் தனியார் நிறுவனத்தில் பணியாற்றுகிறார். செல்பி விடியோக்கள் எடுத்து இணையத்தில் வெளியிடுவது இவரது பொழுதுபோக்கு.இதற்காக விலோக் என்ற ஆப் பயன்படுத்தி வந்தார். சில தினங்களுக்கு முன்னர் நண்பர்களே! டீ குடியுங்கள்!! என்று ஒரு விடியோ வெளியிட்டிருந்தார்.15நொடிகள் ஓடக்கூடிய அந்த விடியோவில் அவர் டீ குடிப்பது போன்றும்,  டீ கோப்பையை வாயில் ஊதி சூடாக இருக்கிறது என்று சிரிப்பது போன்றும் காட்சிகள் இடம்பெற்றுள்ளன.இந்த விடியோ வெளியானதும் அவரை பின் தொடர்வோர் எண்ணிக்கை 30ஆயிரம் வரை அதிகரித்தன.அவரது விடியோவை பகிர்ந்து கொள்ளுவோரின் எண்ணிக்கையும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.இணையத்தில் பிரபலமாவது மிகவும் சுலபமான ஒன்று கடந்த வாரம் அங்கிள் டேன்ஸ் என்ற விடியோ டான்ஸ் மாஸ்டர் ஒருவரை உலகப்பிரசித்தி பெற்றவராக உயரவைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here