தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு! விஜய் நேரில் ஆறுதல்!!

தூத்துக்குடி: ஸ்டெர்லைட் ஆலையை மூடுவதற்கு கடந்த மே22ம் நடந்த போராட்டத்தில் பொதுமக்கள் 13 பேர் துப்பாக்கிச்சூட்டில் பலியாகினர். 60க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.பலியானவர்களின் குடும்பத்தினரையும், மருத்துவமனையில் சிகிச்சை பெறுவோரையும் அரசியல் தலைவர்களும், நடிகர்களும் சந்தித்து ஆறுதல் கூறிவருகின்றனர். நிவாரண தொகையையும் வழங்கி வருகின்றனர்.
நடிகர் விஜய் துப்பாக்கிச்சூட்டில் பலியானவர்களின் வீடுகளுக்கு நேற்று நள்ளிரவில் நேரில் சென்று ஆறுதல் கூறியுள்ளார்.
ஸ்லோனின் ஜான்சி உட்பட பலியானவர்களின் குடும்பத்தினருக்கு தலா ஒரு லட்ச ரூபாய் நிதியும் வழங்கியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here