ரயிலில் போகிறவர்கள் எடையை கவனியுங்க!

மும்பை: ரயில் பயணிகள் எடையை கவனிக்க வேண்டியது ஜூன்1ம் தேதி முதல் அவசியமாகிறது. ரயில்வே துறை இதுதொடர்பாக அறிவிப்பு வெளியிட்டுள்ளது.2ம் வகுப்பில் பயணிப்போர் 35கிலோ லக்கேஜ் எடுத்துச்செல்லலாம். 70கிலோவரை கட்டணம் செலுத்தி அவர்கள் லக்கேஜ் கொண்டு செல்ல அனுமதிக்கப்படுவார்கள்.
ஸ்லீப்பர் வகுப்பில் பயணிப்போர் 40கிலோ எடையுள்ள பொருட்களை எடுத்துசெசெல்ல அனுமதி உண்டு. அவர்கள் 80கிலோவரை கட்டணம் செலுத்தி லக்கேஜ் கொண்டுசெல்லலாம்.லக்கேஜ்களை 100செ.மீ நீளம், 60செ.மீ அகலம் 25செமீ உயரமுடைய பெட்டி, சூட்கேஸ் ஆகியவற்றில் மட்டுமே எடுத்துச்செல்ல வேண்டும். இவ்விதிமுறைகள் ஏற்கனவே உள்ளன. ஆனால், விமானநிலையங்களைப்போன்று ரயில் நிலையங்களில் கண்டிப்பு காட்டப்படுவதில்லை.ஆனால் ஜுன்1ம் தேதி முதல் லக்கேஜ் குறித்து ரயில்வேத்துறை தீவிரமாக கண்காணிக்கிறது. விதிமுறை மீறுவோருக்கு 6மடங்கு அபராதம் விதிக்கப்படும் என்று தெரிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here